சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் மற்றும் தர்காக்களுக்கான மானியம் 10 கோடியாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர அரபிக் பாடப்பிரிவு கூடிய விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்