தமிழக அரசு 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களுடைய உயர்கல்விக்கு செல்லும் பொழுது மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் பாடத்திட்டங்கள் அனைத்துமே லேப்டாப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு வீடியோ மற்றும் பிடிஎஃப் வடிவில் வழங்குவதால் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும் என்ற நோக்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மடிக்கணங்கி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து முதல்வரின்  ஆலோசனைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .மேலும் உலக அளவில் செமி கண்டக்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.