தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை  என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.  பள்ளியில் வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம், மற்றும் சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழைக்காக நவம்பர் 2௦-ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வாக்காளர்கள் முகாம் நடைபெற உள்ளதால் வருகிற 3௦-ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.