ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடர் ஆனது ஜூன் இருபதாம் தேதி தொடங்கயிருக்கிறது. அடுத்து உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடக்கும் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளுமே கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கட் சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,  “இந்தியா சொந்த மண்ணில் விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது அவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்.

நாங்கள் இந்தியாவை தோற்கடிப்போம். எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நல்ல தொடர். நான் பும்ராவை 5 டெஸ்ட் தொடர்களில் எதிர்கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். அவருடைய திறமைகள் என்ன என்பதும் எனக்கு தெரியும். என்னை ஆச்சரியப்படுத்தும் எதுவும் இருக்க போவதில்லை .  முகமது ஷமியின் திறமையும் பும்ராவை போலவே பயங்கரமாக இருக்கும்.இவர்களின் தொடக்க பந்துவீச்சை என்னால் கடந்து செல்ல முடிந்தால் நிறைய ரன்கள் அடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.