தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தேவையில்லாத காரணங்களுக்கு மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாவட்டத்தில் ஒரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.