கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருவந்தலா அருகே மாம்பழப் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் கார்த்திகேயன் என்பவருடைய மகள் தேவிபத்ரா (7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் பகவதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த தேவிபத்ரா தனது சகோதரர் காசிநாதர் மற்றும் அனுஸ்ரீ ஆகியோருடன் மழையில் நனைந்தபடி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கோவில் சுற்றுச்சூழல் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. உடனே சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சிறுவர்கள் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி தவித்தனர். இதில் படுகாயம் அடைந்த மூன்று சிறுவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சிறுமி தேவிபத்ரா உயிரிழந்தார். மற்ற இரண்டு சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.