ஐபிஎல் 2026 தொடரில் மழையினால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க புதிய விதிகளை பிசிசிஐ வகுத்துள்ளது. லீக் சுற்றுப் போட்டிகளின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால், குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும்; அப்போதுதான் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
மேலும் ஒருவேளை ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். ஆனால், பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு கூடுதல் நேரம் மற்றும் ‘ரிசர்வ் டே’ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பிளே-ஆஃப் சுற்றுகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி மழை நீடித்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் மைதான நிலைமை சூப்பர் ஓவர் நடத்தவும் ஒத்துழைக்கவில்லை என்றால், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ, அந்த அணியே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இதனால் இறுதிப் போட்டியிலும் இதே விதிமுறை பொருந்தும்; ரிசர்வ் டே அன்றும் போட்டி நடைபெறவில்லை என்றால், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்த புதிய விதிகள் அணிகளுக்கு லீக் சுற்றிலேயே அதிக புள்ளிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
