கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்ததால் அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் பல வகையான பயிர்கள் நீரில் நனைந்து நாசமாகின. தற்போது இந்த பகுதிகளில் நீரினை வடிய வைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கள ஆய்வு மேற்கொள்ள வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அதன்பின் வரும் ஆறாம் தேதி அன்று கள ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஆகியோரிடம் முதல்வர் சந்திக்க உள்ளார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகை, இழப்பீடு தொகை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.