உத்தர் பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த நித்தின் என்பவரது ஏழு வயது மகனுக்கு இடது கண்ணில் இருந்து தண்ணீர் வடிந்த கொண்டிருந்துள்ளது. இதனால் தனது மகனை ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனைக்கு நித்தின் அழைத்துச் சென்றார்.

அங்கு சிறுவனின் கண்ணை பரிசோதித்து விட்டு கண்ணின் உள்ளே பிளாஸ்டிக் போன்ற ஒன்று இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்தால் குணப்படுத்திவிடலாம் என்றும் அறுவை சிகிச்சைக்கு 45 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

மகனின் கண்ணை சரியாக்க பெற்றோர் அந்த பணத்தை செலுத்தி அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. ஆனால் அதன் பிறகு தான் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இடது கண்ணில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மருத்துவர் வலது கண்ணில் செய்திருந்தார்.

இது குறித்து பெற்றோர் கேட்டபோது மருத்துவமனையில் மரியாதை குறைவாக நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.