தமிழகத்தில் நேற்று மூன்று மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக விளக்கியுள்ளார். அதாவது இந்த மருத்துவ கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட சிலவற்றில் குறைபாடுகள் இருந்ததால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1021 காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த காலி பணியிடங்களுக்கு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் எம் ஆர் பி மூலமாக 4000 மேற்பட்ட காலி பணியிடங்கள் 10 நாட்களுக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.