மும்பை நகரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் என்ற டெலிவரி ஊழியரிடம் ஒரு பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாடிக்கையாளர் ஒருவர் மராட்டியில் பேச வேண்டும் என வற்புறுத்தியதால் டெலிவரி ஊழியர் தனக்கு மராட்டி பேச தெரியாது. நீங்கள் என்னை வற்புறுத்த முடியாது என அமைதியாக பதிலளித்துள்ளார்.

அதற்கு அந்த பெண் இங்கே இப்படித்தான் பேச வேண்டும். இல்லையென்றால் பணம் தர மாட்டேன் என கூற ரோஹித் அப்போ நீங்க ஆர்டர் செய்ய வேண்டாமே. ஆர்டரில் ஏதாவது பிரச்சனை இருந்தால் மட்டும் காட்டுங்கள் என தெளிவாக பதில் அளித்துள்ளார். இதனை ரோகித் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அதனை பார்த்த பெண் நீங்க என்னை வீடியோ எடுக்க கூடாது. நான் உங்களை வீடியோ எடுக்கலாம் என கூறி கடைசி வரை பணம் செலுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டார். ரோஹித் பதிவு செய்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து டொமினோஸ் நிறுவனம் மற்றும் மும்பை போலீசார் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை .