மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிரடி திருப்பமாக, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்று வருவதாக பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில் திரிணாமூல் காங்கிரஸின் வாக்கு வங்கி சிதறி, பாஜக வலுப்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நந்திகிராம் தொகுதியில் 5 முஸ்லிம் பெரும்பான்மை வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 14 வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே தான் 3,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
2021 மற்றும் 2024 தேர்தல்களில் மம்தா பானர்ஜிக்குக் கிடைத்த முழுமையான முஸ்லிம் ஆதரவு இந்த முறை பிளவுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ள கருத்து, வங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
