மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சேர்ந்தவர்கள் பரத் கெய்வாட் – மோனி கெய்வாட் தம்பதி. இந்த  தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வீட்டில் பரத் கெய்வாட்டின் தாய் மற்றும் மருமகன் தீபக் கெய்வாட் தங்கியிருந்தனர். பரத் கெய்வாட் அமராவதி மாவட்டத்தில் துணை காவல் ஆணையராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பரத் கெய்வாட் தனது சொந்த துப்பாக்கியால் மனைவி மோனி கெய்வாட் கா மற்றும் மருமகன் தீபக் கெய்வாட்டை சுட்டுக்கொலை செய்து விட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.