மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதி வசித்து வரும் நிலையில் அந்த மனைவி ஆண் நண்பருடன் பேசியதால் கணவன் விவாகரத்து கேட்க அவருக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதை எதிர்த்து அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது பற்றி நீதிபதிகள் கூறும்போது, ஒரு மனைவி தன்னுடைய ஆண் நண்பரிடம் பாலியல் உறவு குறித்த விஷயங்களை ஆபாசமாக சாட் செய்வது தவறு. இதனை எந்த ஒரு கணவராலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

திருமணத்திற்கு பிறகு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தங்களுடைய நண்பர்களுடன் இதுபோன்ற ஆபாசமான முறையில் உரையாடுவது தவறு. திருமண உறவில் கண்ணியத்தை கடைபிடிப்பது அவசியம். திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவி இருவரும் செல்போனில் உரையாடலாம் ஆனால் அது கண்ணியத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். கணவன் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து தன்னுடைய ஆண் நண்பனுடன் ஆபாசமான முறையில் மனைவி சாட் செய்தது கண்டிப்பாக அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் ‌என்று நீதிபதிகள் கூறினார். மேலும் குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது செல்லும் என்று இறுதியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.