
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வீட்டில் தனியாக அந்த பெண் மட்டும் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு தங்கை இருக்கும் நிலையில் அவர் புவனகிரி பகுதியில் தன்னுடைய கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர்களின் ஒரு மகன் 10-ம் வகுப்பு மற்றும் இன்னொரு மகன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தன் மனைவியின் அக்கா கணவரை இழந்ததால் அவருக்கு அவ்வப்போது அவர் உதவிகள் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சந்தித்ததால் கள்ளக்காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் சம்பவ நாளிலும் உல்லாசமாக இருந்தனர். அந்த சமயத்தில் தங்கையும் அறுவடைக்காக தன் மகன்களுடன் அங்கு சென்று விட்டார்.
அப்போது அந்த ஊரில் இருந்தவர்கள் உன் கணவர் அக்கா வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அவர் தன் மகன்களுடன் அங்கு சென்ற நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் தன் அக்காவிடம் எப்படி என் கணவருடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி தகராறு செய்தார்.
நீ உயிரோடு இருந்தால் தானே என் கணவருடன் தொடர்பு வைத்திருப்பாய் என்று கூறி தன் அக்காவை அவரும் அவருடைய மகன்களும் சேர்ந்து சரமாறியாக அடித்தனர். பின்னர் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணையும் அவருடைய இரு மகன்களையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.