‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஷாரிப் ஹாஷ்மி, தனது மனைவி நஸ்ரின் ஹாஷ்மி வாய் புற்றுநோயால் ஆறாவது முறையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உருக்கமான தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தப் புற்றுநோய், ஏற்கனவே ஐந்து முறை குணமடைந்த போதிலும் தற்போது ஆறாவது முறையாக மீண்டும் தாக்கியுள்ளது.
இந்த முறை புற்றுநோய் உடல் முழுவதும் பரவியுள்ளதாகக் குறிப்பிட்ட ஷாரிப், இது மிகவும் தீவிரமான நிலை என்றாலும், தனது மனைவி காட்டும் மனஉறுதி தங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளிப்பதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
மேலும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உடல்நலச் சவால்கள் நிறைந்த இந்த எட்டாண்டு காலப் போராட்டத்தில் நஸ்ரின் ஒரு மாபெரும் போராளியாகத் திகழ்ந்து வருகிறார். ஐந்து அறுவை சிகிச்சைகள் மற்றும் பல கதிரியக்க சிகிச்சைகளைத் தாண்டி, தற்போது மீண்டும் சிகிச்சை பெற்று வரும் அவர், ஷாரிப் தனது இக்கட்டான காலங்களில் எப்போதும் உடன் நின்றதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் தனது கனவுகளுக்காக வீட்டை விற்று, நகைகளை அடமானம் வைத்துத் தனக்குத் துணையாக இருந்த மனைவியின் இந்த நிலையை எண்ணி ஷாரிப் வருந்தினாலும், “இந்தத் துன்பமும் கடந்து போகும்” என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருவரும் இணைந்து இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
