மனிதனின் மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய எலான் மஸ்கின் நியூரா லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம் நினைவாற்றல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்கவாதம், கண்பார்வை இல்லாதவர்களின் பிரச்சனை ஒரு சின்ன சிப் மூலமாக சரி செய்யும் முயற்சியை பல ஆண்டுகளாக எலன் மஸ்கின் இந்த நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.