
ஒடிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மாவட்டத்தில் ஜூரபந்தா கிராமத்தில் 20 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியின பெண். இந்தப் பெண்ணின் இடத்தில் ஒருவர் டிராக்டரை ஓட்டி வந்துள்ளான். இதன் காரணமாக அந்த பெண் என்னுடைய பயிரை சேத படுத்தாதே என்று கூறியுள்ளார். அந்த நபரின் பெயர் அபய் பாக்.
இவர் விவசாய நிலத்தில் சேதத்தை ஏற்படுத்தியதால் அந்தப் பெண் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஜாதி ரீதியாக அந்த பெண்ணை திட்டி அவமானப்படுத்தியதோடு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். அதோடு அந்த நபர் தன்னுடைய மனித மனத்தை அந்த பெண்ணின் வாயில் திணித்துள்ளார். இந்த கொடூர செயல் தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது அந்த நபரை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.