உலக அளவில் ஏஐ  தொழில் நுட்பம் என்பது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான நன்மைகள் விளைந்தாலும் அதில் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்கள் ஒரு கட்டத்தில் வேலையே இல்லாத நிலைக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான செய்திகளை உருவாக்குகிறார்கள். திரையுலக பிரபலங்களை அவதூறாக சித்தரித்து வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இதன் மூலம் பல பிரபலங்கள் சிக்கலை சந்தித்துள்ளனர்.அதே நேரத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏராளமான நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. இதனால் அந்த தொழில்நுட்பத்தை பற்றி இன்றைய காலகட்டத்தில் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்த நிலையில் சீன நாட்டில் ஒரு ஏஐ தொழில்நுட்ப ரோபோ  திடீரென பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ஒரு நிகழ்ச்சிக்காக மக்கள் அனைவரும் கூட்டமாக கூடி நிற்கிறார்கள். அந்த விழாவினை ஏற்பாடு செய்தவர்கள் மக்களை குஷி படுத்துவதற்காக ஏஐ தொழில்நுட்ப ரோபோவை உள்ளே இறக்கினர்.அந்த ரோபோ பார்ப்பதற்கு மனிதர்கள் போன்று இருக்கும் நிலையில் அதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கையசைத்தனர். ஆனால் திடீரென அது ஆவேசப்பட்டு பொதுமக்களை தாக்க ஆரம்பித்தது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் ரோபோவை அங்கிருந்து இழுத்து சென்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி ஏஐ தொழில்நுட்பம் குறித்த பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது.