
மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆகி 8 நாட்களே ஆன நிலையில் மனைவி வர்ஷா உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை தூங்கிக் கொண்டிருந்த பொழுது கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு புது மாப்பிள்ளை தினேஷ் தற்கொலை செய்துள்ளார். மனநலம் சரியில்லாத தினேஷை குணமாக்குவதற்காக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் அவருடைய குடும்பத்தினர்.
திருமணம் செய்து வைத்தாலாவது அவருடைய மனநலம் சரியாகும் என்று நம்பிக்கை வைத்து இவ்வாறு செய்துள்ளனர். இந்த நிலையில் தினேஷ் கல்யாணம் முடிந்து எட்டு நாட்களே ஆன நிலையில் மனைவி உட்பட ஏழு பேரை கோடரியால் வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.