
SSC வேலை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படை பணிகளில் 4187 சப் இன்ஸ்பெக்டர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் ssc.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.