
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,006 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. ஸ்டேனோகிராபர் கிரேடு சி மற்றும் டி ஆகிய பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.