தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தினார். அதன்படி ஆளுநர் நேற்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில் தன் உரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான கலந்துரையாடல் இன்று ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஆளுநர் ரவியிடம் தேர்வர் ஒருவர், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடு மற்றும் கொள்கை வேறுபாடு இருக்கும்போது நான் எதை பின்பற்றுவது என கேட்டார். அதற்கு ஆளுநர் பதிலளித்ததாவது “குழப்பம் வேண்டாம். மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும். மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டவர்கள் நீங்கள்” என்று கூறினார்