டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ சந்தேஷ்காலி வன்முறை உள்ளிட்ட சில வழக்குகளை விசாரித்து வருகிறது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை எனவும் மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லாத இந்த மனு விசாரணைக்கு உகந்தது கிடையாது எனவும் வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதி மத்திய அரசால் தான் சிபிஐ உருவாக்கப்பட்டது என்று கூறினார். அதன் பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ இயங்கி வருகிறது. மத்திய அரசு உத்தரவு இல்லாமல் சிபிஐ எப்படி விசாரணை நடத்த முடியும்.‌ மேலும் மேற்குவங்க அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது தான் என்று கூறி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.