இந்தியாவில் வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசு ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் யாருக்கு வீடு கிடைக்கும் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள், வீடு கட்ட இயலாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2 அறைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அரசின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தகுதி உள்ளவர்கள் https://pmaymis.gov.in என்ற இணையதளத்தில் நீங்களே விண்ணப்பிக்கலாம்.

வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் இந்த ஆவணங்களுடன் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகலாம். ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் தொலைபேசி எண் ஆகிய ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும்