இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு கீழ் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டரை உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களால் மட்டுமே பெற முடியும்.

இவர்கள் பிபிஎல் கார்டு மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். பயனர்கள் தங்களது வங்கி கணக்கை ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆதார் அட்டை, கைபேசி எண், புகைப்படம், பிபிஎல் பட்டியல் பெயர், ரேஷன் கார்டு நகல் மற்றும் வங்கியின் புகைப்பட நகல் ஆகியவற்றை உடன் இணைத்து அருகில் உள்ள எல்பிஜி கேஸ் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு இலவச கேஸ் சிலிண்டரும் 300 ரூபாய் மானியமும் கிடைக்கும்.