தமிழகம் முழுவதும் நேரம் காலமே இன்றி மதுபானங்கள் கிடைப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுபற்றி பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் குற்றம்சாட்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, உரிம நிபந்தனைகளை மீறி மது விற்பனை செய்யக்கூடிய கிளப்கள், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மதுபான விற்பனை உரிம விதிகளின் படி, உரிமம் பெற்ற கிளப்கள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே மது விற்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் நிபந்தனைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.