
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த மாநிலத்தில் அந்த பகுதி சேர்ந்த ஒரு கான்ஸ்டபிள் சிரஞ்சீவி என்பவரை ஒரு ரவுடி அடித்துள்ளார்.
அதாவது லட்டு என்கிற தாதா மது போதையில் போலீஸ்காரரை தாக்கியதாக கூறப்படுகிறது. இவரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் அவரது கூட்டாளிகளான ராகேஷ், பாபுலால் மற்றும் விக்டர் ஆகியோரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
ఈ దృశ్యం తెనాలి నడిరోడ్డు పై…
తప్పు చేసినా కొట్టే హక్కు వీరికి లేదు
పౌరహక్కులు లేని “బాబు పాలన “ఇది!
కదలండి…….న్యాయ పోరాటానికి!@ncbn @naralokesh @Anitha_TDP @APPOLICE100 pic.twitter.com/uiS5Nvzwx7— Ambati Rambabu (@AmbatiRambabu) May 26, 2025
இவர்கள் மூவரையும் போலீசார் பொது வெளியில் வைத்து லத்தியால் அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை ஒய்எஸ்ஆர் கட்சியின் செய்தி தொடர்பாளர் அம்பத்தி ராம்பாபு என்பவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது லத்தியை வைத்து ஒருவரை போலீஸ்காரர் ஆறு முறை அடித்த நிலையில் அவர் வலியால் துடித்த நிலையில் மற்றொருவரை 10 முறை அடித்தார். அவர்கள் எங்களை மன்னித்து கெஞ்சி விடும்படி கெஞ்சி அழுத போதிலும் போலீசார் அவர்களை லத்தியால் அடித்தனர்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் அவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களை பொது வெளியில் அடிக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,