மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனை மிகப்பெரிய கலவரமாக மாறியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் முதல்வராக பைரோன்
சிங் இருக்கிறார். கடந்த ஒரு வருடமாகவே மணிப்பூரில் பதற்றம் நீடிக்கும் நிலையில் சமீபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் வன்முறையை கட்டுப்படுத்த பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் ஒரு எக் தலை பதிவை வெளியிட்டு இருந்தார். அதாவது மணிப்பூரில் தற்போது நிலவும் பதற்றமான சூழலுக்கு முதல்வர் பைரோன்சிங் திறமையற்ற ஆட்சிதான் காரணம் என்றும், 5000 துணை ராணுவத்தினரை மத்திய அரசு அனுப்பியதையும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இதற்கு மணிப்பூர் முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தற்போது மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலுக்கு காங்கிரஸ் கட்சியினரின் முன்னாள் செயல்பாடுகள் தான் காரணம் என்று விமர்சித்துள்ளார்.

அதாவது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது உள்துறை மந்திரியாக‌ ப. சிதம்பரம் இருந்த நிலையில், மணிப்பூரின் அப்போதைய முதல்வராக இபோபிசிங் இருந்தார். அப்போது மியான்மரை சேர்ந்த தங்கலியன் பாவ் கைட் என்பவரை ‌ப. சிதம்பரம் மணிப்பூருக்கு அழைத்து வந்தார். அவர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜோமி மறு ஒருங்கிணைப்பு ஆர்மியின் தலைவர். தற்போது நிலவும் இந்த பதற்றமான சூழலுக்கு மியான்மரில் இருந்து சட்டவிரோதமான குடியேற்றங்கள் வந்தது தான் காரணம்.

இதற்கு முக்கிய காரணம் ப. சிதம்பரம். அவர் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தின் தலைவரை சந்தித்து பேசிய புகைப்பட ஆதாரம் கூட என்னிடம் இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு ப. சிதம்பரத்தின் பதிவுக்கு இபோபிசிங்கும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கார்கே விடம் புகார் கூறிய நிலையில் பின்னர் ப. சிதம்பரம் தான் வெளியிட்ட பதிவை நீக்கியுள்ளார்