
பிரபல பாடகையான பிரட்னி ஸ்பயர்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். கடந்த 2004- ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான ஜெய்சன் அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்த பிரட்னி இரண்டு நாட்களிலேயே திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை 2007-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
இந்த நிலையில் இப்போது தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிக சிறந்த காரியம் இதுதான். சிலருக்கு இது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிக சிறந்த காரியம் என்று சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.