
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற போது அதில் முழு தவளை உயிரிழந்த நிலையில் கிடந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக ஹோட்டல் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டனர்.
அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. அதனால் தவளை இருந்த உணவை வீடியோ எடுத்துவிட்டு சாப்பிட்ட உணவிற்கு மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு அந்த குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ஆய்வு செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.