இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் இருக்கும் சஞ்சௌலி என்ற இடத்தில் ஒரு மசூதி அமைந்துள்ளது. அங்குள்ள மசூதியை ஒட்டி கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்து அமைப்பினர் சட்ட விரோதமாக கட்டுமான பணி நடைபெறதாக கூறி அதனை இடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

நேற்று சப்சி மண்டி தல்லி என்ற இடத்தில் சுமார் நூற்றுக்கணக்கானோர் சஞ்சௌலி பகுதியை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது ஜெய் ஸ்ரீ ராம், ஹிந்து ஒற்றுமை ஜிந்தாபாத் என கோஷமிட்டுள்ளனர். முன்னதாக போலீசார் மசூதி அருகே அவர்களை செல்ல விடாமல் தடுப்பு அமைத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அழுத்தும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.