
கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது மசூதிக்குள் புகுந்து இந்துமத கோஷங்களை எழுப்பியது மத நம்பிக்கையை புண்படுத்தாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 26 ஆம் தேதி உள்ளூரில் உள்ள ஒரு மசூதிக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை நீதிபதி எம். நாகப்பிரசன்னா விசாரித்தார். அப்போது அவர் மசூதிக்குள் நுழைந்து ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமிட்டதால் மத நம்பிக்கை புண்படும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இந்த புகாரை அளித்துள்ள மனுதாரர் தன் மனுவில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அப்பகுதியில் ஒற்றுமையாக வாழ்வதாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையை புண்படுத்தும் சட்ட பிரிவின்கீழ் வராது என்று நீதிபதி கூறினார். பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இதற்கு மேலும் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு வழிவகுக்கம் என்று கூறினார்.