மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு காப்பீடு திட்டங்கள் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் சார்பாக மக்களுக்கு பல்வேறு காப்பீடு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது மத்திய அரசின் பிஎம் ஆயுஷ்மான் பாரத் அட்டையானது PMJAY என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அஅதாவது இந்த அட்டை வைத்திருப்பவருடைய குடும்பத்தை சேர்ந்த யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கவும், சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் இலவச மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திட்டத்தில் மருத்துவமனை சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 72,000 க்கு மிகாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள்  https://nha.gov.in/PM-JAY என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.