மத்திய அரசு ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு பரிசாக  கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து  அறிவித்தது. இதுபோன்று பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்பில் இருக்கிறார்கள். சென்னையில் 476-வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை. பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் எண்ணெய் விலையை குறைத்து நுகர்வோருக்கு பலன் அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து  வருகிறது.

இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சீராக இருந்தால், நாட்டில் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார். தீபாவளி பண்டிகை மற்றும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.