பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குகிறார்கள். பெரிய அளவிலான பணத்தை பூர்த்தி செய்வதற்கு வங்கியில் தனி நபர் கடன் வாங்குவார்கள். அந்த கடனை அடைப்பதற்கு புதிய கடனை வாங்குகிறார்கள். அவ்வாறு செய்வது சிக்கலானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதை ஒரே கடனாக ஒருங்கிணைப்பது சாதகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக உங்களிடம் தலா 2 லட்சம் அளவில் ஐந்து கடன்கள் இருந்தால் இந்த கடன்களை ஈடு கட்டுவதற்கு 10 லட்சம் கடனை பெறுவது பலன் அளிக்கும்.  தற்போதுள்ள கடன்களின் நிலுவைத் தொகை கணிசமானதாக இருந்தாலும் அதிக வட்டி வீதத்தை கொண்டிருந்தாலும் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனை பெறுவது சாதகமாக இருக்கலாம்.

புதிய கடன் மிகவும் சாதகமான வழிமுறைகளை கொடுத்தால் முந்தையதை விட நிர்வகிக்க எளிமையானது. இருப்பினும் புதிய கடனுக்கு அதிக வட்டி இருந்தால் இந்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல தனிநபர்கள் பழைய கடன்களை அடைப்பதற்காக தனி நபர் கடன்களை எடுத்து கடனில் சிக்கி விடுகிறார்கள். இது கவனக்குறைவாக அவர்களுடைய நிதி நிலையை மோசமாக்குகிறது. அதோடு வங்கிகள் கடனுக்கான மறைக்கப்பட்ட கட்டணங்களை விதிக்கலாம்.

இது ஒட்டுமொத்த திருப்பி செலுத்தும் தொகையை அதிகரிக்கிறது. தற்போதைய கடனை சமாளிக்க முடிந்தாலும், இஎம்ஐகள் சிரமம் இல்லாமல் செலுத்தப்பட்டாலும் புதிய கடனை பெறுவதை தவிர்ப்பது நல்லது. வங்கியில் இக்கட்டான சூழலில் கடன் வாங்குகிறோம் என்றாலும் வாங்கும் கடனுக்காக வட்டி, செயலாக்க கட்டணம், திருப்பி செலுத்தும் காலம், போன்ற பல விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே கடன் பெறுவது நல்ல முடிவு.