தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக DRS சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் tnpl 2023 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கோவையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்  இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கும் என TNPL நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, டிக்கெட் விலை 2200 முதல் 1,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆன்லைன் டிக்கெட் விற்பனையை பொறுத்தே நேரடி டிக்கெட் விற்பனை தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.