இந்திய விமான நிலையத்தில் (AAI) பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் செய்யூரிட்டி ஸ்கிரீனர் மற்றும் உதவியாளர் (பாதுகாப்பு) என இரு பதவிகள் இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

1. செய்யூரிட்டி ஸ்கிரீனர்

காலியிடங்கள்: 230

சம்பளம்:

முதல் வருடம் – ரூ.30,000/-

இரண்டாம் வருடம் – ரூ.32,000/-

மூன்றாம் வருடம் – ரூ.34,000/-

கல்வித்தகுதி:

ஏதேனும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம்.

பொதுப் பிரிவு/EWS/OBC – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்

SC/ST – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்

CGPA அல்லாமல் முழு எண் வடிவத்தில் சதவீதம் உள்ளிட வேண்டும்.

ஆங்கிலம், இந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியில் படிக்க/பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

2. உதவியாளர் (பாதுகாப்பு)

காலியிடங்கள்: 166

சம்பளம்:

முதல் வருடம் – ரூ.21,500/-

இரண்டாம் வருடம் – ரூ.22,000/-

மூன்றாம் வருடம் – ரூ.22,500/-

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற வாரியம்/நிறுவனம் மூலம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி

பொதுப் பிரிவு – குறைந்தபட்சம் 60%

SC/ST – குறைந்தபட்சம் 55%

முழு எண் வடிவமாக சதவீதம் மட்டும் உள்ளிட வேண்டும்.

ஆங்கிலம், இந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியில் படிக்க/பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம்: 21 வயது

அதிகபட்சம்: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aai.aero

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

அரசாணையை படித்த பிறகு விண்ணப்பிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

➤ செய்யூரிட்டி ஸ்கிரீனர்:

SC/ST/பெண்/EWS – ரூ.100/-

பிற பிரிவுகள் – ரூ.750/-

➤ உதவியாளர் (பாதுகாப்பு):

SC/ST/பெண்/EWS – ரூ.100/-

பிற பிரிவுகள் – ரூ.500/-

தேர்வு முறை:

Shortlist + ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்ப தொடங்கும் தேதி: 09.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள், தங்களுடைய தேவையான ஆவணங்களை தயார்படுத்தி, உடனே இணையதளத்தில் விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.