இந்திய தனித்துவ அடையாள ஆவணமானது பொதுமக்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது .கடந்த எட்டு முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களோடு அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம் அல்லது மை ஆதார் என்ற இணையதளத்தில் புதுப்பிப்பதாக கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்களும் புதுப்பிக்க தொடங்கினார்கள். இதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.  நேரில் ஆதார் சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதார் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிப்பதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.