ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் நர்சி பட்டினம் என்ற நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்குட்ப ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேர்தல் நடைபெற்றது. இதில் நர்சிபட்டினம் நகராட்சியிள் மூலபர்த்தி ராமராஜ் என்பவர் போட்டியிட்டு இருந்தார். அவருக்கு எதிராக ஆளுங்கட்சி ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டார். தேர்தலின் போது மூலபர்த்தி ராமராஜு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது நகராட்சி உள்ள வீடுகளுக்கு தினமும் சுத்தமான குடிநீர் வசதி, தரமான சாலை, மின்விளக்கு, கழிவு நீர் வடிகால்கள் ஆகியவை செய்து கொடுப்பேன் என்று பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். இதனிடையே கவுன்சிலராக பதவி ஏற்ற பிறகு நகராட்சிக்கு செய்ய வேண்டிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால் ஆளும் கட்சியினர் அவர் கேட்ட திட்டங்களுக்கு நிதி கொடுக்கவில்லை. இதனால் 31 மாதங்கள் சென்று விட்டது. அவரால் தன்னுடைய தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மக்கள் கேள்வி கேட்க தொடங்கினார்கள்.

இதனை அடுத்து அங்கு நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் ராமராஜ் எழுந்து என்னை நம்பி மக்கள் வாக்களித்தனர். நான் அவர்களுக்கு நல்லது செய்வேன் என்று நம்பி தான் அவர்கள் எனக்கு ஓட்டு போட்டிருப்பார்கள். ஆனால் என்னால் வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை என்று கூறிக்கொண்டு தான் அணிந்திருந்த செருப்பு எடுத்து தன்னை தானே சராமாறியாக அடித்துக் கொண்ட பிறகு கூட்டத்தில் இருந்து அழுது கொண்டே வெளியேறியுள்ளார்.