மத்திய அரசு ஊழியர்களுக்கான காலி பணியிடம் நிரப்புதல் குறித்த அறிவிப்பை மத்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு பல்வேறு பதவிகள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் காலி பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 9.64 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நாடு முழுவதும் ரோஸ்கர் மேளாக்கள் நடத்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வருவாய்த்துறை, நிதி சேவை துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் போன்ற துறைகளுக்கான பணியிடம் நிரப்பப்படும் நிலையில் மேற்கண்ட பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.