சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் கூடுதலாக 6 பெட்டிகளை கொண்ட 28 ரயில்கள் இயக்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோவில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ரூ. 2,800 கோடி செலவில், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் வாங்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.