வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.