கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2021 முதல் ஜூலை 2022 வரை 4000 கடன் செயலிகள் ஆராயப்பட்டதாகவும் அதில் 2500 மோசடி செயலிகள் என்று கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் லோன் செயலிகளால் மக்கள் ஏமாறுவது குறையும் எனவும் நம்பப்படுகிறது. அதேசமயம் சமீப காலமாக லோன் செயலிகள் மூலம் மக்கள் பலரும் ஏமாற்றப்படும் நிலையில் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.