தமிழகத்தில் தற்போது உண்ணி  காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் திண்டுக்கல்லில் வேகமெடுத்துள்ளது. இந்த உண்ணி காய்ச்சலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது மர்ம காய்ச்சல் பாதிப்பால் பலர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கான ஆய்வு முடிவு வெளிவந்த போது தான் அது உண்ணி காய்ச்சல் என்று தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 61 வயது முதியவர் பழனிச்சாமி என்பவர் உயிரிழந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துவிட்டார்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதில் உண்ணி காய்ச்சல் என்பது மழைக்காலங்களில் கிருமிகளால் தாக்கப்படும் உண்ணிகள் கால்நடைகளை கடிக்கிறது. ‌ இந்த உண்ணிகள் மனிதர்களை கடித்தால் அவர்கள் சிகப்பு நிறத்தில் சிறுநீர் கழிப்பார்கள். அதோடு தலைவலி, சொறி மற்றும் உடல் சோர்வு போன்றவைகளும் அதிகரிக்கும். மேலும் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.