ராமநாதபுரத்தில் பச்சைக்கிளி, பஞ்சவர்ண புறா, மைனா போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வளர்ப்பவர்கள் வன அலுவலகங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர் பச்சைக்கிளி போன்ற வன உயிரினங்களை வளர்ப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் 1972இன் படி குற்றம் ஆகும்.

எனவே மக்கள் தங்களின் வீடுகளில் வளர்க்கக்கூடிய கிளிகள் மற்றும் பிற வன விலங்குகளை ஒப்படைக்க வேண்டும். வனப் பணியாளர்கள் ரோந்து வரும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டால் வளர்ப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்டம் வன அலுவலர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.