தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. பருவ மழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான முன்னேற்றை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவமழையை முன்னிட்டு தமிழக மின்சார வாரியம் பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மின்சார வாரியம் கூறியதாவது, மின்கம்பிகள் மற்றும் டிரான்ஸ்பார்மகள் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். மின்சாதனங்கள் அருகே தேங்கி நிற்கும் தண்ணீர் அருகே பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் செல்லக்கூடாது. தாழ்வாக தொங்கும் என் கம்பிகளை தொடக்கூடாது. ஈர கைகளால் மின் சாதனங்கள் மற்றும் ஸ்விச் போர்டு போன்றவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும். ஈரப்பதமான சுவர்களை தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் மின் சாதனங்களால் ஆபத்துகள் ஏற்பட நேரிடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனங்களுடன் மின் சாதனங்களை கையாள வேண்டும்.