வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.