
அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் கொங்கன் கடற்கரை அருகே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.