இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி டீப் ஃபேக் மூலம் ஹாங்காங் இல் உள்ள MNC நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள சிஎப்ஓவிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தை நிதித்துறை ஊழியர் ஒருவருக்கு மர்ம நபர்கள் இமெயில் அனுப்பியுள்ளனர்.

மேலும் டீப் பேக் உதவியுடன் அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வீடியோ காலிலும் பேசியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பி அந்த நிறுவனம் 200 கோடி ரூபாயை அனுப்பி ஏமாந்துள்ளது. இதனால் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.